சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... நாடகமாடிய தாயும், மகளும்-என்ன நடந்தது?
சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அவரது தாயார் புகார் அளித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
மேற்கு வங்கம், பிர்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கண்காட்சியில் இருந்து இரவு வீடு திரும்பியபோது 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறியுள்ளார். இதனை பெற்றோரிடம் கூறிவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அவரது தாயார் புகார் அளித்து தெரிவிக்கையில், சனிக்கிழமை இரவு விஸ்வகர்மா பூஜையையொட்டி கின்னஹார் கிராமத்தில் கண்காட்சி நடைபெற்றது.
சிறுமி தற்கொலை
அதில் கலந்து கொள்ள எனது மகள் நண்பருடன் சென்று இருந்தார். இரவு நீண்ட நேரம் ஆகியும் திரும்பவில்லை என்பதால் கால் செய்தோம். அதையும் அவர் எடுக்கவில்லை. அதன் பின்னர் இரவு முழுக்க அவரை தேடி அலைந்தோம். ஆனால், அவரை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தான் காலையில் எனது மகள் வீடு திரும்பினார். இரவு முழுவதும் எங்கே இருந்தாய் என்று கேட்டதும், எனது மகள் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். கிர்னாஹர் கிராமத்திலிருந்து வீடு திரும்பிய போது, 4 இளைஞர்கள் அவளை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று மயக்கமடையச் செய்துள்ளனர்.
தாயார் புகார்
அதன் பின்னர் அவர்கள் கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். இதையெல்லாம் அவள் அழுது கொண்டே கூறினாள். அதன் பின் அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். எனது மகள் வீடு திரும்பிய போது, அவர் அணிந்து இருந்த உடைகள் கிழிந்து இருந்தது. எனது மகளுக்கு உடலில் சில இடங்களில் காயமும் ஏற்பட்டு இருந்தது.
இது தொடர்பாகப் போலீசில் புகார் அளித்து உள்ளோம். அவர்கள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார். அதனையடுத்த போலீஸார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கல் வெளிவந்தன. இதுகுறித்து, மாவட்ட எஸ்பி நாகேந்திர நாத் திரிபாதி, சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை.
நாடகமாடிய குடும்பம்
சிறுமி கின்னஹரில் உள்ள கண்காட்சிக்கே செல்லவில்லை என்பது தெரிய வந்தது அதற்குப் பதிலாக அவர் தனது நண்பருடன் பரு என்ற பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு தான் அவர்கள் இருவரும் இரவை கழித்து உள்ளனர்.
காலையில் வீடு திரும்பியபோது பெற்றோருடன் சண்டை ஏற்பட்டுள்ளது. அதனாலேயே, அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது தாயார் அளித்த புகார் உண்மை இல்லை. மேலும் இந்த சம்பவம் குறித்து அவர்கள் எந்த புகாரும் அளிக்கவில்லை என தெரிவித்தார்.