திருமணத்திற்கு மறுத்த பெண்.. வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் - காதலன் விபரீத முடிவு!
வாட்ஸ் அப் ஸ்டேட்டசில்' தனது தற்கொலைக்குக் காதலி தான் எனக் கூறி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் . இவர் அந்த பகுதியில் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமாகி கணவரைப் பிரிந்து வாழும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் ஒரு கட்டத்தில் காதலாக மாறியுள்ளது . பின்னர் இருவரும் கடந்த சில மாதங்களாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் அந்த பெண் வேறொருவரைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாகக் கூறியுள்ளார்.
இதனையடுத்து பிரேம்குமாரிடம் அந்த பெண் பேசுவதை நிறுத்தியுள்ளார் . மேலும் எந்த ஒரு செல்போன் அழைப்பையும் எடுக்காமல் துண்டித்து அந்த பெண் வந்தார்.
இளைஞர் தற்கொலை
இதனால் விரக்தி அடைந்த பிரேம்குமார், நள்ளிரவு நேரத்தில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது 'வாட்ஸ் அப் ஸ்டேட்டசில்' தனது தற்கொலைக்குக் காரணம் அந்த பெண்தான் என அவரது செல்போன் எண்ணைப் பதிவு செய்து இருந்தது தெரியவந்தது .
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .