இன்ஸ்டாவில் காதலிப்பவர்களுக்கு இது ஒரு பாடம் - மூணாறு அருகே பள்ளி மாணவிகளுக்கு நடந்த கொடூரம்!
இன்ஸ்டா மூலம் காதலிப்பதாகக் கூறி பள்ளி மாணவிகள் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் முயற்சியில் ஈட்டுப்பட்டது சம்பவம் அரங்கேறியுள்ளது.
இன்ஸ்டாகிராம்
கேரள மாநிலம் மூணாறு புகழ் பெற்ற தலமாக உள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வந்து செல்வது வழக்கம்.இந்த நிலையில் , மூணாற்றில் பிரபல பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
வழக்கம் போல் பள்ளி முடிந்து, நேற்று முன்தினம் மாணவ-மாணவிகள் வெளியே வந்து கொண்டிருந்தனர்.அப்போது திடீரென பள்ளி அருகே கார் ஒன்று வந்துள்ளது . அந்த காரில் சுமார் 25 வயதுடைய 2 இளைஞர்கள் 9-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளை அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் இது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் ஆசிரியர்கள் புகார் அளித்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
பள்ளி மாணவிகள்
அப்போது காரின் நிறம் மற்றும் பதிவு எண்களை அடிப்படையாகக் கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து மூணாற்றில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் விடுதியில் கார் இருந்துள்ளது. அங்குச் சென்ற காவல் துறையினர் விடுதியிலிருந்து 2 மாணவிகளை மீட்டனர்.
தொடர்ந்து அந்த 2 இளைஞர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அன்வர் ரஹீம் முகமது அலி என்று தெரியவந்தது.
இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் மாணவிகளிடம் காதலிப்பதாகப் பேசி மூணாற்றுக்கு வந்து அழைத்து பாலியல் வன்கொடுமை செய்யும் முயற்சியில் ஈட்டுப்பட்டது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.