திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ள பெருக்கு- பதறவைக்கும் திக்.. திக் காட்சி!
திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் திடீரென்று வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உடுமலை
திருப்பூர் மாவட்டம் உடுமலை உள்ள திருமூர்த்தி மலையில் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது . இந்த கோவிலில் தை, ஆடி அமாவாசை, மகா சிவராத்திரி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
மேலும் கோயிலின் அருகில் உள்ள மலையேற்றத்தில் பஞ்சலிங்கமும் அதனை ஒட்டி அருவியும் காணப்படுகிறது.இந்த அருவி சிறந்ததொரு சுற்றுலா தலத்தளமாகத் திகழ்கிறது. இதனை காண பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவது உண்டு .
வெள்ள பெருக்கு
ஆனால்நேற்று பெய்த மழையால் பஞ்சலிங்க அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்புக் கம்பிகளை அடித்து சென்றது.மேலும் அமணலிங்கேஸ்வரர் கோவிலிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கோயிலின் நடை சாத்தப்பட்டது.
கோயிலுக்கு செல்லும் பாதைகள் தடுப்புகளால் அடைக்கப்பட்டன.அதேபோல அருவிக்குச் செல்லும் பாதையும் அடைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.