பதறவைக்கும் திக்.. திக் காட்சி - ஆற்றின் நடுவே சாய்ந்த மின்சார கோபுரம்!
கொள்ளிடம் ஆற்றுக்குள் அமைக்கப்பட்டு இருந்த உயர் மின்னழுத்த கோபுரம் இன்று அதிகாலை சாய்த்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளிடம்
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் வேகமாக நிரம்பி வருவதோடு, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகே உள்ள, ஒரு லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் உயர் மின்னழுத்த ராட்சத கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து கொள்ளிடம் ஆற்றில் வெள்ள பெருக்குஏற்பட்டதன் காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டது.
திக்.. திக் காட்சி
இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கோபுரம் விழும் அபாய நிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து ,திருவானைக்காவல் உள்ளிட்ட பகுதியில் காலை 7 மணியிலிருந்து மின்சாரம் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வந்த நிலையில், உயர் மின்னழுத்த கோபுரம் இன்று அதிகாலை சாய்த்தது.
மேலும் உயர் மின்னழுத்த கோபுரம் சாய்த்து விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.