காவிரி கொள்ளிடத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை..!
திருச்சி காவேரி கொள்ளிடத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்.
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் அணைகள் முழுவதும் நிரம்பி வருகின்றன அதன் உபரி நீரானது அதிக அளவு வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீர் அனைத்தும் மேட்டூர் அணையில் வந்து சேர்வதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து இரண்டு லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அந்த நீரானது சேலம், நாமக்கல், கரூர் வழியாக திருச்சி முக்கொம்பு வந்து கொண்டிருக்கிறது.
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தற்போது முக்கொம்பு காவிரி கதவணையில் 35 ஆயிரம் கன அடியும், கொள்ளிடம் கதவணையில் 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேட்டூரில் அணையிலிருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் திருச்சி முக்கொம்பு வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனால் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட இருப்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்