ஓசூரில் கடும் வெள்ளப் பெருக்கு வீடுகளில் தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வீடுகளை வெள்ளம் சூழந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளன.
நள்ளிரவில் கனமழை
ஓசூரில் கனமழையானது நள்ளிரவில் வெளுத்து வாங்கியது. மேலும் ராஜகால்வாய் உடைப்பு ஏற்பட்டதால் கேசிசி குடியிருப்பு பகுதியில் 150க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
தரைத்தளத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீடுகளின் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ள நீர் சூழந்துள்ளதால் மக்கள் வெளியே வரமுடியால் தவித்து வருகின்றனர்.
சுமார் 10 மணி நேரமாக தண்ணீர் வடியாததால் குடியிருப்பு வாசிகள் தவித்து வருகின்றனர். மேலும் தீயணைப்பு துறையினர் வெள்ளம் சூழந்த பகுதியில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்
வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் ஆகியோர் மீட்க்கப்பட்டு வருகின்றனர். நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
கடும் வெள்ளத்தினால் வாகனங்களும் சேதமடைந்துள்ளன என்று குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மேயர் சத்யா தெரிவித்துள்ளார்.