திருச்செந்தூர் முருகன் கோயிலில் கனிமொழி எம்.பி. திடீர் ஆய்வு !
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா முன்னேற்பாடுகள் குறித்து திமுக எம்.பி. கனிமொழி ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர்
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடை பெறும் திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா அடுத்த மாதம் நவம்பர் 2-ம் தேதி காலையில் யாக சாலை பூஜையுடன் தொடங்குகிறது.
அன்று அதிகாலை 1மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைப்பெறும். கடைசி நாளான ஆறாம் நாள் (7.11.2024) திருவிழாவில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது.இந்த விழா தொடங்கி 13-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.
கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோவில் வளாகத்தில், 18 இடங்களில் தற்காலிக கொட்டைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கனிமொழி
இந்த ஏற்பாடுகளைக் கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு பணிகளை ஆய்வு செய்தார். பக்தர்களுக்குச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கனிமொழி எம்பி கேட்டறிந்தார்.
இதனையடுத்து கடற்கரை பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தார்.