விஜய் அரசியல் வருகை..கனிமொழி கொடுத்த அட்வைஸ் - என்ன சொன்னாங்க தெரியுமா?

Vijay Smt M. K. Kanimozhi Tamil nadu
By Swetha Aug 12, 2024 06:20 AM GMT
Report

விஜய் அரசியல் வருகை குறித்து எம்.பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியல் 

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இவர் திரைத்துறையில் கொடி கட்டி பறந்ததை தொடர்ந்து, அரசியலில் களம் காண முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டிருந்தார்.

விஜய் அரசியல் வருகை..கனிமொழி கொடுத்த அட்வைஸ் - என்ன சொன்னாங்க தெரியுமா? | Kanimozhi Gives Advice To Vijay On Political Entry

அதன்படி, தமிழ வெற்றிக் கழகம் பெயரில் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் விஜய், தனது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி விரைவில் கட்சி கொடி அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறார் என கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கு இடத்தை இறுதி செய்யும் பணிகளில் நிறைய இடையூறுகள் ஏற்படுவதாகவும் தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகின்றன.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் திமுகவுக்கு பாதிப்பா..? - எம்.பி. கனிமொழி பதில்!

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் திமுகவுக்கு பாதிப்பா..? - எம்.பி. கனிமொழி பதில்!

எம்.பி கனிமொழி

இந்த நிலையில், விஜய்யின் அரசியல் வருகை தொடர்பாக திமுக எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். அன்மையில் அவர், கலந்து கொண்ட தனியார் நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து எம்பி கனிமொழியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

விஜய் அரசியல் வருகை..கனிமொழி கொடுத்த அட்வைஸ் - என்ன சொன்னாங்க தெரியுமா? | Kanimozhi Gives Advice To Vijay On Political Entry

அதற்கு பதிலளித்த அவர், "விஜய் குடும்பத்துடன் அவரது சிறுவயது முதலே எனக்கு பழக்கம் இருக்கிறது. இந்த இடத்திற்கு, எல்லாரும் கொண்டாடும் நட்சத்திரமாக வருவதற்கு- அதற்கான உழைப்பு,

அதற்கான பாதை எல்லாமே அவருக்கு புரிந்ததால் தான் அதை செய்ய முடிந்தது. அதே தெளிவோடு, அதே உழைப்போடு அவர் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்று பேசியுள்ளார்.