நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் திமுகவுக்கு பாதிப்பா..? - எம்.பி. கனிமொழி பதில்!
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம்
நடிகர் விஜய் அரசியலில் கால்பதிக்கவுள்ளார் என்ற தகவல்கள் கடந்த சில மாதங்களாக வலம் வந்த வண்ணம் இருந்தது. அதனை உண்மையாகும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது கட்சி பெயரையும் அறிவித்துள்ளார் நடிகர் விஜய்.

அதன்படி கட்சியின் பெயர் 'தமிழக வெற்றி கழகம்' என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் போட்டியில்லை என்றும், யாருக்கும் ஆதரவில்லை. அதே நேரத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலைக் குறிவைத்து தனது கட்சி செயல்படும் என்றும் அறிவித்துள்ளார்.
எம்.பி கனிமொழி கருத்து
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் கட்சிதலைவர்கள் தங்களது கருத்து தெரிவித்திருந்தனர். அந்தவகையில் திமுக எம்.பி கனிமொழி பேசியதாவது "ஜனநாயக நாட்டில் யார்வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

ஆகவே அவருக்கும் அரசியலுக்கு வருவதற்கான எல்லா உரிமையும் உண்டு.எனவே இது குறித்து கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. நிச்சயம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு எந்தபாதிப்பும் இருக்காது.
முதலமைச்சரின் நல்லாட்சியை பொறுத்துதான் அதற்கான ஒரு பரிசாகதான் மக்கள் திமுகவிற்கு வாக்களிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    