கொளுத்தும் வெயில்..வீட்டில் ஏசி ஓடிக்கிட்டே இருக்கா?பணத்தை மிச்சப்படுத்த சூப்பர் டிப்ஸ்!
கோட்டை காலத்தில் ஏசி மின்சார பயன்பாட்டை குறைத்து பணத்தை மிச்சப்படுத்த டிப்ஸை தெரிந்துகொள்ளலாம்.
சூப்பர் டிப்ஸ்
இந்த சுட்டெரிக்கும் கோடை வெயில் தங்கி கொள்ள முடியாத அளவு வாட்டிவதைக்கிறது. புவி வெப்பமடைவதால் ஒவ்வொரு கோடைக்காலமும் ஆண்டுக்கு ஆண்டு வெப்பமாகி வருகிறது. இதனை எதிர்கொள்ள ஒரே வழி ஏர் கண்டிஷனர்.இதனால், நமது வீடுகளில் கட்டாயமாக ஏர் கண்டிஷனர்களை வழக்கத்தை விட நாம் அதிகமாக பயன்படுத்த நேரிடலாம்.
இம்மாதிரியான நேரத்தில் பெரும்பாலும் இன்வெர்ட்டர் ஸ்மார்ட் ஏசியில் முதலீடு செய்வது நல்லது. இது உடலை குளிர்ச்சியாக வைப்பது மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்கு உழைத்து பணத்தை மிச்சப்படுத்திக்கிறது. இந்த காலகட்டத்தில் இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் பலவகையான ஏசிகள் கிடைக்கின்றன.இது நன்கு குளிரூட்டுவதையும் தாண்ட்டி மின்சார செலவையும் மிச்சப்படுத்தும்.
சரியான வெப்பநிலை
ஏசியை குறைவான செட்டிங்கில் வைப்பதால் சீக்கிரம் குளிர்ச்சி ஆகிடும் என்பது ஒரு தவறான எண்ணம்.இதனால், உங்கள் எலெக்ட்ரிசிட்டி பில் அதிகரிக்கும். ஏசியை 24 டிகிரி செல்சியஸுக்கு வைப்பது நல்லது மற்றும் அது மனித உடலுக்கு ஏற்ற வெப்பநிலையாக அமையும்.
ஏசியில் ஒவ்வொரு டிகிரி குறையும்போதும் மின்சார பயன்பாடு 6 சதவீதம் அதிகமாகும்.
ஃபில்டர் சுத்தம்
உங்கள் வீட்டில் விண்டோ ஏசி அல்லது ஸ்பிலிட் ஏசி எது இருந்தாலும் வீட்டிற்குள் இருக்கக்கூடிய யூனிட்டிலும் தூசுகள் ஃபில்டர்களில் நுழைவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் ஏசி வழக்கத்தைவிட அதிகமாக வேலை செய்யும் இதனால் மின்சார கட்டணம் அதிகரிக்கும்.
எனவே அதனை அடிக்கடி ஃபில்டர்களை சுத்தம் செய்து சர்வீஸ் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ செய்யலாம்.
கதவு,ஜன்னல் மூடுதல்
எப்பொழுதும் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடியிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
குளிர்ந்த காற்று அறையை விட்டு வெளியே செல்லாதவாறு பார்த்துக்கொண்டால் ஏசி நீண்ட காலத்திற்கு உழைக்கும் இல்லையெனில் அதிக மின்சாரம் செலவாகலாம்.
ஃபேன் ஆன்
செய்யவும் ஏசியின் சிறந்த நண்பர் ஃபேன் தான் காற்றோட்டத்தை மேம்படுத்தி அறையின் குளிர்ச்சியை விரைவுப்படுத்துவதற்கு ஃபேன் உதவுகிறது.ஏசியை ஆன் செய்த பிறகு மின்விசிறியையும் ஆன் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
மிதமான வேகத்தில் வைத்து விட்டு அறை குளிர்ச்சியான பிறகு நீங்கள் பேனை ஆஃப் செய்து கொள்ளலாம்.
டைமர் பயன்படுத்தவும்
நீங்கள் தூங்குவதற்கு முன்பு ஏசியின் டைமரை ஆன் செய்துவிட்டு அது ஆட்டோமேட்டிக்காக 1 அல்லது 2 மணி நேரத்திற்கு பிறகு ஆஃப் ஆகுமாறு வைத்துவிடுங்கள்.
இதனால்,ஏசி தொடர்ந்து வேலை பார்த்து வந்ததால் அதற்கும் ஒரு பிரேக் கொடுப்பது போல அமையும்.பணமும் மிச்சமாகும்.