குளிர் காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு - தவிர்க்க இந்த குறிப்புகளை அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
குளிர் காலத்தில் மாரடைப்பை தவிர்ப்பதற்கான குறிப்புகள் குறித்து பார்க்கலாம்.
குளிர் காலம்
குளிர் காலத்தில் உடலில் உள்ள சாதாரண வெப்பநிலையை பராமரிக்க இதயம் கடினமாக உழைக்கிறது. இதனால் இரத்த நாளங்கள் சுருங்குகின்றன.
எனவே, இரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. இந்த நிலையை சமாளிக்க சில நடவடிக்கைகள் குறித்து தெரிந்துக்கொள்வோம். இரவில் அதிக குளிராக உணர்ந்தால், வெதுவெதுப்பை உண்டாக்கும் போர்வையைப் பயன்படுத்துங்கள்.
மாரடைப்பு
இதய நோயாளியாக இருந்தால், கடும் குளிரில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும். அனைத்து பருவங்களிலும் வழக்கமான உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சியை பின்பற்றுவது முக்கியம். இல்லையெனில் அது இதய ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். இந்த காலகட்டத்தில் தாகம் எடுக்காததால், தண்ணீர் குடிப்பது குறைகிறது.
அதனால் நீரிழப்பு ஏற்பட்டு இதய செயல்பாட்டில் சிரமம் ஏற்படுகிறது. குளிர் உடலில் அதிகமான மன அழுத்த ஹார்மோனை தூண்டுகிறது. இது ரத்த அழுத்தத்தையும், இரத்த சர்க்கரையும், இதய துடிப்பையும் அதிகரிக்கிறது. புகையிலை மற்றும் சிகரெட் போன்ற போதைப்பொருட்களிலிருந்து விலகி இருங்கள்.
ஏனெனில், இது இதய நோய் அபாயத்தை மேலும் அதிகரிக்கும். குளிர் காலத்தில் நார்ச்சத்து, ப்ரோட்டீன் தேவைக்காக பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.