ஏர் கூலரில் எப்போதும் காற்று ஜில்லுனு வரனுமா? இதை ஃபாலோ பண்ணுங்க..
ஏர் கூலரில் எப்போதும் குளிர் காற்று வர சில டிப்ஸ்களை பார்ப்போம்.
ஏர் கூலர்
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பலர் ஏசி விற்பனை கடைகளின் வாசலில்தான் நிற்கின்றனர். ஆனால் ஏசி சற்று விலை அதிகமாக இருப்பதாலும் அதற்கான மின்சார கட்டணமும் அதிகமாக இருப்பதால் பலரின் தேர்வு ஏர்கூலராக உள்ளது.
ஏர் கூலரில் காற்று குளிர்ந்தபடியே வருவதற்கான சில குறிப்புகளை பார்ப்போம். கூலரின் பின்புறம் இருக்கும் வலையை 2 முதல் 3 வருடங்களுக்கு 1 முறை கண்டிப்பாக மாற்ற வேண்டும்.
குளிர்காற்று
இரவு தூங்குகையில் கூலரை ஜன்னல் பக்கத்தில் வைத்தால் குளிர்ந்த காற்று அறை முழுதும் பரவ உதவியாக இருக்கும். அதில் மிதமான நீரை ஊற்றுவதற்கு பதிலாக,
குளிர்ந்த நீரை ஊற்றினால் காற்றும் மிக குளிர்ந்ததாகவே வரும். மேலும், தூங்கும் அறையில் சூரிய ஒளி வராதபடி திரை எதுவும் உபயோகித்தால் குளிர் வெளியேறுவதை தடுக்கலாம்.