படுத்ததும் தூக்கம் வரவில்லையா? இதை செய்தால் கன்களை மூடியதும் தூங்கிடலாம்..
நல்ல தூக்கத்தை பெறுவதற்கான சில எளிய குறிப்பிகளை பார்ப்போம்.
தூக்கமின்மை
தூக்கமின்மை என்பது பெரும் பிரச்சனையாகவே உள்ளது. படுக்கைக்கு சென்ற பின்னும் பெரும்பாலான மக்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளது.
இதற்கு சில விஷயங்களை நாம் பின்பற்றினால் போதும். சில நிமிடங்களில் நல்ல தூக்கத்தை பெறலாம். இரவில் நிதானமான இசையைக் கேட்பது உங்கள் மனதை அமைதிப்படுத்தும். படுத்ததும், ஆழமான மூச்சை எடுத்து உங்கள் முழு கவனத்தையும் உங்கள் சுவாசத்தில் செலுத்தவும்.
எளிய வழிகள்
இது மன அழுத்தத்தை குறைத்து, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.
மேலும், இரவில் சூடான பால் குடிப்பது நன்றாக தூங்க உதவுகிறது. இதனை தொடர்ந்து செய்தால் நல்ல தூக்கத்தை பெறலாம்.
தூக்கத்தில் சிக்கல் இருந்தால், நீங்கள் இயற்கை வைத்தியங்களை முயற்சிக்க வேண்டும். ஏழு முதல் எட்டு மணிநேரம் ஆழ்ந்த தூக்கம் வராமல் இருப்பது, உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.