கடந்த 3 ஆண்டுகளில் 11 பேரைக் கொன்ற கொடிய மிருகம் - அதிகாரிகள் பிடித்தது எப்படி?
மகாராஷ்டிராவில் கடந்த 3 ஆண்டுகளில் 11 பேரைக் கொன்ற பெண் புலியை வனத்துறை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலம், சந்திரபூர் மாவட்டத்தில் வனப்பகுதி அதிகமாக உள்ளது . இதனால் அங்கு வசிக்கும் கிராமங்களுக்குள் புகுந்து புலிகள் அடிக்கடி மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாட்சாவில் ஆறு பேர், பண்டாரா மாவட்டத்தில் நான்கு பேர் மற்றும் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரி வனப்பகுதியில் மூன்று பேர் என மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் புலி 13 பேரைக் கொன்றது.
சமீபகாலமாகக் கால்நடை மருத்துவர்கள் மற்றும் பல அதிகாரிகளும் புலியைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.ஆனால் பலமுறை கூண்டுகள் வைத்துப் பிடிக்க முயற்சி செய்தும் தப்பித்து ஓடியது.
பெண் புலி
இந்த நிலையில் டி 83 என்று அழைக்கப்படும் அந்தப் பெண் புலி நேற்று காலை ஜனலா எனும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் சுற்றித் திரிந்ததாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து,உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மயக்க மருந்து செலுத்திப் பிடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டது.
3 ஆண்டுகளுக்குப் பின்னர் பிடிபட்டிருப்பது மிகவும் நிம்மதியாக இருப்பதாக முதன்மை தலைமை வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தார்.