ஒவ்வொரு மாநிலத்திலும் குடிப்பதற்கான வயது என்னென்ன தெரியுமா? முக்கிய விவரங்கள் இதோ!
ஒவ்வொரு மாநிலத்திலும் குடிப்பதற்கான வயது குறித்து இந்த பதிவில் காணலாம்.
வயது என்னென்ன?
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வோர்லி பகுதியில் கடந்த வாரம் அதிகாலையில் அதிவேகமாக சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அந்த பெண்ணின் கணவரும் படுகாயமடைந்தார்.
குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படும் மிஹிர் ஷா என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான மிஹிர் ஷா (24) தனது வயது 27 என்று போலி அடையாள அட்டையை பயன்படுத்தி மது அருந்தியதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் சட்டப்பூர்வ குடிப்பழக்கமான 25 வயதுக்கு மேல். மும்பையின் ஜூஹூவில் உள்ள ஒரு பப்பில் நுழைவதற்கு போலி அடையாள அட்டையை அவர் பயன்படுத்தி இருக்கிறார். இந்த தகவல், குறைந்த வயதுடையவர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது தொடர்பான விதிகள் மீண்டும் கவனம் பெற்றது.
விவரங்கள் இதோ
அதன்படி, குடிப்பதற்கான சட்டப்பூர்வ வயது நாடு முழுவதும் மாறுபடும். இந்தியாவில் குடிப்பதற்கான சட்டப்பூர்வ வயது மாநில சட்டங்களை பொறுத்து 18 முதல் 25 ஆண்டுகள் வரை பரவலாக மாறுபடுகிறது. குஜராத், பீகார், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் மதுவுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளன.
அரியானா, கோவா, மகாராஷ்டிரா, சண்டிகர், மேகாலயா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்கள் சட்டப்பூர்வ குடிப்பழக்க வயதை 25 ஆக நிர்ணயித்துள்ளன. அதேபோல, உத்தர பிரதேசம், ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் 21 வயது வரை மது அருந்துவதை கட்டுப்படுத்துகின்றன.
கேரளாவில் மட்டும் குடிப்பதற்கான சட்டப்பூர்வ வயது 23 ஆக உள்ளது. இந்தியாவில் சட்டப்பூர்வ குடிப்பழக்க வயது 23 ஆக இருக்கும் ஒரே மாநிலமாக கேரளா. அண்மையில், கேரளா குடிப்பதற்கான சட்டப்பூர்வ வயதை 21லிருந்து உயர்த்தியுள்ளது.
கோவா, ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, சிக்கிம் மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்கள் 18 வயதில் பீர் உட்கொள்ள அனுமதிக்கின்றன. இருப்பினும் அந்த மாநிலங்களில் மதுபானங்கள் அருந்துவதற்காக வயது வரம்பு அதிகமாகவே உள்ளது.