நியூயார்க்கில் திருமாவின் ஓவியத்தை வரைந்த கலைஞர் - வைரலாகும் வீடியோ
வட அமெரிக்கா 35வது தமிழ் சங்கம் விழா நியூயார்க்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அமெரிக்கா சென்றார்.
திருமாவளவனின் ஓவிய வீடியோ
தற்போது சமூகவலைத்தளங்களில் தொல்.திருமாவளவனின் ஓவிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சாலையோரத்தில் ஒரு நாற்காலியில் தொல்.திருமாவளவன் அமர்ந்திருக்க, அவரை பார்த்து ஓவிய கலைஞர் ஒருவர் அவரை வரைந்து கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை தொல்.திருமாவளவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நியூ யார்க் வீதியில் ஜூலை 03 அன்று நள்ளிரவில் சாலையோரத்து ஓவியக் கலைஞரின் 'விரைவு ஓவியம்' அவருக்கு எனது வாழ்த்துகளும் நன்றியும். pic.twitter.com/TUEgfDNfUy
— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 6, 2022
80 வயது பூர்த்தி... தாய், தந்தை யாகபூஜைக்கு வராத நடிகர் விஜய்... - திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்