தோல்விக்கான காரணமாக ராகுல் காந்தி இதைத்தான் சொல்வார் - இன்றே கணித்த அமித் ஷா!

Rahul Gandhi Uttar Pradesh India Lok Sabha Election 2024
By Jiyath May 30, 2024 06:18 AM GMT
Report

நாடாளுமன்ற தேர்தலின் முதல் 5 கட்டங்களிலேயே பிரதமர் மோடி 310 இடங்களை கடந்து விட்டார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த்துள்ளார். 

அமித் ஷா

உத்திரபிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் பகுதியில் பாஜக வேட்பாளர் பங்கஜ் சவுத்ரியை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் "நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது.

தோல்விக்கான காரணமாக ராகுல் காந்தி இதைத்தான் சொல்வார் - இன்றே கணித்த அமித் ஷா! | This Is Rahul Gandhi Say When Defeated Amit Shah

அன்று பிற்பகலில் 2 இளவரசர்கள் (ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ்) இணைந்து செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்கள்.அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களால் நாங்கள் தோற்று விட்டோம் என கூறுவார்கள். தங்கள் தோல்விக்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது பழி போட முடிவு செய்து இருக்கிறார்கள்.

மோடியின் தியானத்தை ஒளிபரப்பினால் இது நடப்பது உறுதி - மம்தா பானர்ஜி திட்டவட்டம்!

மோடியின் தியானத்தை ஒளிபரப்பினால் இது நடப்பது உறுதி - மம்தா பானர்ஜி திட்டவட்டம்!

பணியாற்ற முடியுமா?

நாடாளுமன்ற தேர்தலின் முதல் 5 கட்டங்களிலேயே பிரதமர் மோடி 310 இடங்களை கடந்து விட்டார். ராகுல் பாபா, நீங்கள் 40 இடங்களை கூட பெற மாட்டீர்கள். மற்றொரு இளவரசருக்கு (அகிலேஷ் யாதவ்) வெறும் 4 இடங்கள் மட்டுமே கிடைக்கும். எதிர்க்கட்சிகளிடம் ஒரு பிரதமர் வேட்பாளர் இல்லை.

தோல்விக்கான காரணமாக ராகுல் காந்தி இதைத்தான் சொல்வார் - இன்றே கணித்த அமித் ஷா! | This Is Rahul Gandhi Say When Defeated Amit Shah

அவர்கள் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை வைத்திருப்பார்கள். இது ஒன்றும் பொது ஸ்டோர் இல்லை, 130 கோடி மக்கள் வாழும் ஒரு நாடு. அப்படி ஒரு பிரதமர் பணியாற்ற முடியுமா? என்று அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.