மோடியின் தியானத்தை ஒளிபரப்பினால் இது நடப்பது உறுதி - மம்தா பானர்ஜி திட்டவட்டம்!
பிரதமர் மோடி தியானம் செய்வது டிவியில் ஒளிபரப்பப்பட்டால் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூலை 1-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து பிரதமர் மோடி கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார்.
தேர்தல் வாக்கப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக பிரதமரை மோடி இவ்வாறு செய்வது தேர்தல் நடத்தை விதியை மீறுவதாகும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
மம்தா பானர்ஜி
இந்நிலையில் இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கூறுகையில் "பிரதமர் மோடி தியானம் செய்வது டிவியில் ஒளிபரப்பப்பட்டால் நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்.
அவரால் தியானம் செய்ய முடியும். ஆனால், அது டிவியில் ஒளிபரப்ப முடியாது. ஒளிபரப்பப்பட்டால் அது தேர்தல் விதியை மீறுவதாகும். தியானம் செய்யும் யாருக்கும் கேமரா தேவையா? வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக 48 மணி நேர அமைதியான காலத்தில் வாக்கு சேகரிப்பதற்கான வழியாகும்" என்று தெரிவித்துள்ளார்.