தேர்தல் பிரச்சாரம் - பறக்கும் முத்தங்களை அள்ளி வீசிய முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா!
தேர்தல் பிரச்சாரத்தின்போது தொண்டர்களை நோக்கி பறக்கும் முத்தங்களை கொடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் சந்திரப்பிரியங்கா.
மக்களவை தேர்தல்
2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்தியா முழுவதும் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. புதுவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.
பறக்கும் முத்தம்
இவருக்கு ஆதரவாக முதலமைச்சர் ரங்கசாமி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று நெடுங்காடு தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது, அவருடன் முன்னாள் அமைச்சரும், நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சந்திரபிரியங்காவும் கலந்து கொண்டார்.

அப்போது தொண்டர்களை நோக்கி சந்திரப்பிரியங்கா பறக்கும் முத்தங்களை தெறிக்க விட்டார். இதனால் உற்சாகமடைந்த தொண்டர்கள் பதில் முத்தங்களை அனுப்பினார். அதனை சந்திரப்பிரியங்கா தனது கையால் ஏற்றுக்கொண்டார். இந்த சம்பவம் பிரச்சாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறையில் இம்ரான் கான் மரணம் - வெடித்த சர்ச்சை...! போராட்டத்திற்கு தயாராகும் 20 லட்சம் பேர் IBC Tamil