தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் - அமித் ஷா நம்பிக்கை!
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று மத்திய உள்துறை அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அமித் ஷா
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்ப்போது அவர் கூறியதாவது "தனிநாடு என்று யாராவது சொன்னால் அது மிகவும் ஆட்சேபணைக்கு உரியது. தற்போது இந்த நாட்டை பிரிக்கவே முடியாது.
தனிப்பெரும் கட்சி
கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கப் போகிறது. பெரும்பான்மை பெற முடியாததற்கான சாத்தியக்கூறுகள் எதையும் காணவில்லை.
பலம் வாய்ந்த 60 கோடி பயனாளிகள் பிரதமர் மோடியுடன் நிற்கின்றனர். அவர்களுக்கு ஜாதி, வயது, பிரிவு கிடையாது.. இந்தச் சலுகைகள் பெற்ற அனைவருக்கும் நரேந்திர மோடி தெரியும். பிரதமர் மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என உறுதியாக நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.