ஐஏஎஸ் வரை தொடர்பு - நிகிதா பற்றி வெளியாகும் தொடர் திடுக்கிடும் தகவல்கள்!
திருப்புவனம் அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா குறித்து வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்குமார் மரணம்
சிவகங்கை, திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் போலீஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 5 காவல்துறையினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
யார் இந்த நிகிதா?
வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் வரை மோசடி செய்துள்ளார். 2010இல் துணை முதல்வரின் உதவியாளரை தெரியும் என்றுக் கூறி மோசடியில் இறங்கியுள்ளார். மேலும், பணத்தைக் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டப்போது நிகிதா குடும்பத்தினர் அவர்களை மிரட்டியுள்ளனர்.
இதேபோல், செக்கானூரணி அருகே தேங்கல்பட்டியை சேர்ந்தவருக்கும் சிவகாமி அம்மாள், நிகிதா உள்ளிட்டோர் அரசு கல்லூரியில் பேராசிரியர் பணி வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நிகிதா டாக்டர் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் மருத்துவம் படித்தவர் அல்ல. அவர் பி.எச்டி. முடித்தவர் என கூறப்படுகிறது. திண்டுக்கல்லில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றியுள்ளார். தற்போது திருமங்கலத்தில் உள்ள அவரது வீடு பூட்டியுள்ளது. நிகிதாவும், தாயாரும் தலைமறைவாகியுள்ளனர்.