சிவகங்கை அஜித்குமார் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
அஜித்குமார் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அஜித்குமார் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, காவல்துறையினரால் அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரின் உடலில் 44 காயங்கள் இருந்ததது தெரிய வந்துள்ளது.
காவலர்கள் அஜித்குமாரை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில், அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மதுரை மாவட்ட நீதிபதி இந்த வழக்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், விசாரித்து ஜூலை 8 ஆம் திகதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு சிபிஐக்கு மாற்றம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதோடு, மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர்(DSP) சண்முகசுந்தரம் பனி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் பெரிய கருப்பன், அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அவர்களிடம் தொலைபேசியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காது எனவும், அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு வேலை தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டிருந்தது. தற்போது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.