வெறுப்பு அரசியல் செய்யும் வெறுப்பானந்தா...மோடியை கடுமையாக விமர்சித்த திருமாவளவன்!
பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார் தொல். திருமாவளவன்.
வெறுப்பனந்தா
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரையிலும் 6 கட்டங்கள் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவான 7ம் கட்டம் நாளை நடக்க இருக்கிறது.

இதற்கான பரப்புரையில் ஒவ்வொரு பகுதிகளிலும் அரசியல் கட்சிகளும், முக்கிய தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில், பிரதமர் மோடி ஒவ்வொரு பிரச்சாரத்திலும் அவரது பேச்சின் வெளிப்பாடு பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
திருமாவளவன்
இந்த சூழலில், கன்னியாகுமரியில் கடல் நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதல் தியானத்தை மேற்கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு நேற்று மாலை ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தார். பிறகு அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகை புரிந்தார்.

இதனை தொடர்ந்து, பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் மேற்கொண்ட அவர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் விவேகானந்தர் என்ற படகில் பயணித்து கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்றார். பின்னர் அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானத்தை பிரதமர் மோடி தொடங்கினார் .
இந்த நிலையில், பிரதமரின் தியானத்தை விமர்சித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில்,
நரேந்திரமோடி
அவர் விவேகானந்தா!
இவர் வெறுப்பானந்தா!
அவர் வெறுப்பை உமிழவில்லை!
அதனால்- விவேகானந்தா ஆனார்.
இவருக்கு வெறுப்பு அரசியல் தான் பெருமுதலீடு.
அதனால்- 'வெறுப்பானந்தாவாக' வலம் வருகிறார்.
வானுயர்ந்து நிற்கும் வள்ளுவனின் புகழ்நிலத்தில்..
எளியோரை ஏய்க்கும் எத்தர்களின் வித்தைகள்
ஒருபோதும் எடுபடாது! என விமர்சித்துள்ளார்.
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
இந்திய தலைநகரை உலுக்கிய கார் வெடிப்பு..! நேரில் கண்டவரின் வாக்குமூலம்: அதிர்ச்சியில் மோடி அரசு IBC Tamil