ஆண்டுக்கு ஒரு பிரதமர் தவறில்லையே - மோடிக்கு திருமாவளவன் பதிலடி
திருமா பேட்டி
பாங்க் ஆப் பரோடா நடத்திய 8-வது ஓ.பி.சி. அனைத்திந்திய கருத்தரங்கம் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, அண்மைக் காலமாக பிரதமர் மோடி பதற்றத்திலும், தோல்வி பயத்திலும் இருக்கிறார் என்பது அவர் பேசி வரும் கருத்துக்கள் உணர்த்துவதாக குறிப்பிட்டு, இந்தியா கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என தெளிவுப்படுத்தினார்.
தவறில்லை...
பிரதமர் மோடிதான் குழப்பத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டிய திருமாவளவன், இந்தியா கூட்டணி ஆண்டுக்கு ஒரு பிரதமரை உருவாக்கப் போவதாக பிரதமர் மோடி கூறுகிறார் என்பதை தெரிவித்து அதில் என்ன தவறு என கேள்வி எழுப்பினார்.
ஒருமித்த கருத்தோடு ஆண்டுக்கு ஒரு பிரதமரை வைத்தாலும் ஆட்சி நிர்வாகம் கட்டுக்கோப்பாக இருக்கும் என நம்பிக்கையுடன் கூறிய அவர், அது நடைமுறைக்கு வந்தால் வரவேற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.