தி.மு.க கூட்டணிக்கு பிளவு ?திருமாவின் ஒப்புதலோடு அவர் பேசியிருக்க மாட்டார் - ஆ.ராசா எம்பி!
வி.சி.க இயக்கத்திற்குப் புதிதாக வந்திருக்கும் ஆதவ் அர்ஜூனா, திருமாவின் ஒப்புதலோடு அவர் பேசியிருக்க மாட்டார்.
விசிக
விசிகட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா, கொள்கை புரிதல் இன்றி, தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குப் பிளவு ஏற்படும் வகையில்தான் பேசியுள்ளதாக .மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா குற்றம்சாட்டினார்.
ஈரோட்டில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆ.ராசா பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் இடதுசாரி சிந்தனையைத் தீர்க்கமான ஆழ்ந்த நம்பிக்கை உள்ள தமிழ் மொழி வரலாற்றுப் பின்னணியோடு கூடிய அரசியல் புரிதல் உள்ளவர் திருமாவளவன்.
அவர் நிச்சயமாக இந்த கருத்தை ஏற்க மாட்டார்.கண்டிப்பாக இந்த கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுப்பார். இப்படிப்பட்ட கருத்துக்களைக் கூறியவர்களை அனுமதிக்க மாட்டார்.
ஆ.ராசா
இதனைத் திராவிட முன்ணேடற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் என்ற முறையில் அல்லாமல் அவருடைய நண்பராக இதனைப் பதிவு செய்ய விரும்புகிறேன் . இதனை அவர் இயற்க்க கூடாது .இயற்கவும் மாற்றார் என்று தெரிவித்தார்.
போதுமான புரிதல் இன்றி வி.சி.க இயக்கத்திற்குப் புதிதாக வந்திருக்கும் ஆதவ் அர்ஜூனா, திருமாவின் ஒப்புதலோடு அவர் பேசியிருக்க மாட்டார். பகுத்தறிவு, சமூக நீதிக் கொள்கை, மதச்சார்பின்மைக்கு எதிரான கொள்கை, தலித் அரசியலை முன்னெடுத்து, சனாதன தர்மத்திற்கு எதிரான கொள்கைகளை திருமா முழங்குகின்றார்.
அவர் இந்த கருத்துக்களை ஏற்க மாட்டார், அவர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்று தி.மு.க நம்புகிறது என்று தெரிவித்தார் .