ராமரை தமிழ்நாடு ஏற்காது; திமுக எம்பி ஆ ராசா பேச்சு - கடுப்பான காங்கிரஸ் கண்டனம்!

Indian National Congress DMK
By Sumathi Mar 06, 2024 05:02 AM GMT
Report

கடவுள் ராமரை ஏற்க மாட்டோம் என திமுக எம்பி ஆ ராசா கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 ஆ ராசா பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் மனதை வெல்லும் வகையில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அதன் வரிசையில், கோவையில் பொதுக்கூட்டம் நடந்தது.

dmk mp a raja - congress

இதில், முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்பியுமான ஆ ராசா பங்கேற்று பேசினார். அப்போது, தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டில் திமுக இருக்காது என பிரதமர் மோடி பேசிய நிலையில் அதற்கு பதிலடி கொடுத்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

‛‛தேர்தலுக்கு பிறகு திமுக இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது. ஜாக்கிரதை.. என்ன விளையாடுறீங்களா? நான் இந்தியா இருக்காது என்று விளையாட்டுக்கு சொல்லவில்லை. பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தால் அரசியலமைப்பு சட்டம் இருக்காது. அரசியலமைப்பு சட்டம் இல்லாவிட்டால் இந்தியாவே இருக்காது. இந்தியா இல்லையென்றால் தமிழ்நாடு தனியாக போய்விடும்.

காவியை அழிக்க கருப்பு, சிவப்பு நீளமும் ஒன்று சேர வேண்டும் :  ஆ.ராசா

காவியை அழிக்க கருப்பு, சிவப்பு நீளமும் ஒன்று சேர வேண்டும் : ஆ.ராசா

 காங்கிரஸ் கண்டனம்

ஜெய் ஸ்ரீராமர் , பாரத மாதா ஆகியோரை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது” எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் செய்தியாளர்களை சந்திக்கையில், ‛ஆ ராசாவின் கருத்துடன் நான் 100 சதவீதம் உடன்படவில்லை.

a raja

இதுபோன்ற பேச்சுக்களை நான் கண்டிக்கிறேன். ராமர் அனைவருக்கும் சொந்தமானவர். அனைவரையும் உள்ளடக்கியே ராமர் என நான் நினைக்கிறேன். ராஜாவின் பேச்சை நான் ஆதரிக்கவில்லை. ஒவ்வொருவரும் பேசும்போது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்'' என கண்டனம் தெரிவித்துள்ளார்.