கமல்ஹாசன் ஏமாற்றி விட்டார்...9 வருடங்கள் ஆகிவிட்டது - தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

Kamal Haasan Tamil Cinema Chennai N. Lingusamy
By Swetha May 03, 2024 07:00 AM GMT
Report

நடிகர் கமல்ஹாசன் மீது திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளது.

கமல்ஹாசன்  

கடந்த 2015ம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் , திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியான படம் "உத்தம வில்லன் ". ஆனால், படம் வெளியாகி அந்த சமயத்தில் தோல்வியைத் தழுவி தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

கமல்ஹாசன் ஏமாற்றி விட்டார்...9 வருடங்கள் ஆகிவிட்டது - தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்! | Thirrupathi Brothers Filed Case On Kamal Haasan

அதை ஈடு செய்வதற்காக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் மீண்டும் ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே உறுதி அளித்திருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், இதுவரை 9 வருடங்களாகியும் எந்த பதிலும் அளிக்காததால் நடிகர் கமல்ஹாசன் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறும்,

அவர் ஒப்புக்கொண்டபடி தயாரிப்பாளர் சங்கம் அவருடன் பேச்சுவார்த்தையை நடத்தி, எங்களுக்கு விருப்பமான கதையில் நடித்து தயாரித்து தருவதற்கு கால்ஷீட் பெற்றுத் தரும்படி திருப்பதி பிரதர்ஸ் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சீமான் கதையை திருடினாரா இயக்குனர் லிங்குசாமி? சீமான் புகார்! மூக்கை உடைக்கும் பதில் அளித்த எழுத்தாளர் சங்கம்!

சீமான் கதையை திருடினாரா இயக்குனர் லிங்குசாமி? சீமான் புகார்! மூக்கை உடைக்கும் பதில் அளித்த எழுத்தாளர் சங்கம்!

தயாரிப்பாளர் சங்கம்

மேலும், உத்தம வில்லன் படத்திற்காக கடன் நெருக்கடியில் இருப்பதாக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் கூறியுள்ளார். இந்த படத்தால் தனது தயாரிப்பு நிறுவனம் கடன் பிரச்னையில் சிக்கித் தவித்து வருகிறது என்றார்.ஆதலால் கமல்ஹாசன் கால்ஷீட் பெற்று தருமாறு தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

கமல்ஹாசன் ஏமாற்றி விட்டார்...9 வருடங்கள் ஆகிவிட்டது - தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்! | Thirrupathi Brothers Filed Case On Kamal Haasan

இந்த விவகாரம் தொடர்பாக சுபாஷ் சந்திரபோஸ் அளித்த புகாரில், “நாங்கள் சொன்ன கதையில் நடிக்காமல் உத்தம வில்லன் கதையில் நடித்தார். படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. த்ரிஷ்யம் கதையை எடுக்க நாங்கள் விரும்பிய நிலையில், அதனை கமல்ஹாசன் மறுத்துவிட்டார். ஆனால் த்ரிஷ்யம் படத்தை வேறு தயாரிப்பு நிறுவனத்துக்கு நடித்துக் கொடுத்தார்.

உத்தம வில்லன் வெளிநாட்டு உரிமையை கமல் ஹாசன் பெற்றார். தமிழ்நாட்டில் படம் வெளியாவதில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால், வெளிநாட்டில் படத்தை கமல் ரிலீஸ் செய்துவிட்டார். இதனால் படம் தமிழில் போதிய வரவேற்பு பெறவில்லை” இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.