சீமான் கதையை திருடினாரா இயக்குனர் லிங்குசாமி? சீமான் புகார்! மூக்கை உடைக்கும் பதில் அளித்த எழுத்தாளர் சங்கம்!
3 வருடத்திற்கு பின்னர் தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளதாக பிரபல இயக்குனர் லிங்குசாமி அறிவித்துள்ள நிலையில் அந்த படத்தின் கதை தன்னுடையது என நாம் தமிழர் சீமான் புகார் அளித்துள்ளார்.
விஜய் நடிக்க வேண்டும் என்று அவருக்காக சீமான் உருவாக்கிய ஒரு புரட்சி இளைஞனின் கதையே ‘பகலவன்’. சீமானின் தீவிர அரசியல் ஈடுபாட்டைப் பார்த்த விஜய், அந்தப் படத்தில் நடித்தால் தனது சினிமா வாழ்க்கைக்கு சிக்கல் விளையும் என்று கருதி அதிலிருந்து வெளியேறினார்.
அதற்காக வருந்தாத சீமான், பின்னர் அந்தக் கதையை சூர்யாவுக்குச் சொன்னதும் அதில் நடிக்க சூர்யா விரும்பம் தெரிவித்தார். ஆனால், படத்தை சீமானே தயாரிக்க விரும்பியதை சூர்யா விரும்பாததால் சூர்யாவும் தட்டிக் கழித்தார். அடுத்து ஜெயம் ரவி இந்தக் கதையைக் கேட்டு வியந்து கால்ஷீட்டும் கொடுத்திருந்த நிலையில்தான் அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன் படுத்தோல்வி அடைந்தது. இதனால், ‘பகலவன்’ படம் தள்ளிப்போனது.
சீமானும் கட்சி அரசியலில் ஈடுப்பட்டதால் பகலவன் படத்தைத் தொடங்க முடியவில்லை.
இந்நிலையிதான் பகலவன் கதையைப்போன்ற ஒன்றை, காட்சிகளை மாற்றி திரைக்கதை எழுதி சூர்யாவை நடிக்க வைக்க லுங்குசாமி களமிரங்கினார். படப்பிடிப்புக்கு நாள் குறிக்கப்பட்டிருந்த நிலையில் சீமான் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் கதைத் திருட்டு புகார் அளித்ததால் சூர்யா பயந்து பின்வாங்கி அந்தப் படத்தில் நடிக்க மறுத்தார்.
இந்நிலையில் கதைத் திருட்டுப் பஞ்சாயத்து பேசப்பட்ட பகலவன் கதையை லிங்குசாமி மீண்டும் படமாக்க முன்வந்துள்ள நிலையில், மறுபடியும் இந்த விவகாரத்தில் சீமான் லிங்குசாமி மீது புகார் அளித்திருக்கிறார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் விசாரணைக்கு வந்த இந்தப் புகாரை ஏற்றுகொள்ள முடியாது என்றும் லிங்குசாமி படம் எடுக்க தடை இல்லை என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளது.