தொடங்கும் மூன்றாம் உலகப் போர்? இந்திய ஜோதிடர் பகீர் கணிப்பு!
மூன்றாம் உலகப் போர் குறித்து ஜோதிடர் குஷால் குமார் கணித்துள்ளார்.
நாஸ்ட்ரடாமஸ்
இந்திய நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படுவர் ஜோதிடர் குஷால் குமார். இவர் எதிர்காலத்தில் நடக்கவுள்ள சம்பவங்களை முன்கூட்டியே கணித்து கூறி வருகிறார்.
முன்னதாக, இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர், ரஷ்யா, உக்ரைன் இடை யிலான போரை முன்கூட்டியே கணித்திருந்தார். இந்நிலையில், ஆகஸ்ட் 4 அல்லது 5-ம் தேதி 3-ம் உலகப் போர் தொடங்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மூன்றாம் உலகப் போர்
அந்த வகையில், ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா கடந்த வாரம் ஈரானில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு இஸ்ரேல்தான் காரணம். பழிவாங்குவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், 3-ம் உலகப் போர் தொடங்கும் என இவர் பல முறை கணித்திருந்த போதும் அது நடக்கவில்லை. கடந்த ஜூன் 18-ம் தேதி மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என கணித்தார். ஆனால் போர் தொடங்கவில்லை.
பின்னர் ஜூலை 26 அல்லது 28-ம் தேதி போர் தொடங்கும் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.