அப்படியே நடக்குதே.. இஸ்ரேல் போர், சீறும் அமெரிக்கா; 3ஆம் உலகப் போர்? கணித்த பாபா வாங்கா!
பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று கவனம் பெற்றுள்ளது.
பாபா வாங்கா
பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார்.
அதில் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது. 1996ல் மரணமடைந்தார். இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது.
குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து, பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்றவை நிஜமாகியுள்ளன. இந்நிலையில், 2024ல் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல பேரழிவுகள் ஏற்படும். புற்றுநோய்க்கான தீர்வு கண்டுபிடிக்கப்படும்.
3ஆம் உலகப் போர்?
குவாண்டம் கணினிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது சொந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரால் படுகொலை செய்யப்படுவார். இந்தாண்டு மூன்றாம் உலகப் போர் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளார்.
இது முக்கியமாக பார்க்கப்படுகிறது. தற்போது, இஸ்ரேல்- ஹமாஸ் படைக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது.
இதில் உலக நாடுகள் இரு பிரிவுகளாகப் பிரிந்து போக வாய்ப்புகள் அதிகம். இது அடுத்த மூன்றாம் உலகப் போருக்கும் கூட வழிவகுக்க வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.