2024ல் ஏற்படப்போகும் பேரழிவு; அப்படியே நடக்கும் பாபா வாங்கா கணிப்பு - உலகநாடுகள் அச்சம்!

Baba Vanga
By Sumathi Jul 20, 2023 05:38 AM GMT
Report

2024 ஆம் ஆண்டு குறித்த பாபா வங்காவின் கணிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாபா வங்கா

பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார். அதில் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது. 1996ல் மரணமடைந்தார்.

2024ல் ஏற்படப்போகும் பேரழிவு; அப்படியே நடக்கும் பாபா வாங்கா கணிப்பு - உலகநாடுகள் அச்சம்! | Baba Vanga Predictions List 2024 Putin Trump

இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து, பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்றவை நிஜமாகியுள்ளன.

பகீர் கணிப்பு

இந்நிலையில், 2024ல் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல பேரழிவுகள் ஏற்படும். புற்றுநோய்க்கான தீர்வு கண்டுபிடிக்கப்படும். குவாண்டம் கணினிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது சொந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரால் படுகொலை செய்யப்படுவார்.

2024ல் ஏற்படப்போகும் பேரழிவு; அப்படியே நடக்கும் பாபா வாங்கா கணிப்பு - உலகநாடுகள் அச்சம்! | Baba Vanga Predictions List 2024 Putin Trump

ஐரோப்பாவில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும். பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், மர்ம நோயால் பாதிக்கப்படுவார். அது அவரை காது கேளாதவர் ஆக்கும் என்றும் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும். ஹேக்கர்கள் மிகவும் அதிநவீனமாகி, பவர் கிரிட்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளை குறிவைப்பார்கள் என கனித்து எச்சரித்துள்ளார்.