உடைந்த முட்டைகளைச் சாப்பிட்டுறீங்களா? மரணம் கூட ஏற்பட வாய்ப்பு இருக்கு- மருத்துவர்கள் எச்சரிக்கை!

Healthy Food Recipes Egg
By Vidhya Senthil Jan 17, 2025 11:00 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in உணவு
Report

 கீறல் விழுந்த அல்லது உடைந்த முட்டைகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கீறல் விழுந்த  முட்டை

நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் உணவாக முட்டை உள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாகக் கடையில் முட்டை வாங்கும் போது ஒன்றிரண்டு உடைவது இயல்பு. இப்படி உடையும் முட்டைகளைச் சிலர் குப்பையில் எரிந்து விடுவர்.

உடைந்த முட்டைகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு

ஆனால் மற்றும் சிலர் முட்டை வீனாகிவிடும் என்பதற்காக அதை ஆப்பிலேட்டாகவோ அல்லது பொரியல் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் இப்படிச் சாப்பிடுவதால் உடலுக்குப் பாதிப்புகள் ஏற்படுகிறது. முட்டைகளில் சால்மோனெல்லா என்டெரிடிடிஸ் (SE) பாக்டீரியாக்கள் உள்ளது.

தினமும் முட்டை சாப்பிடுறீங்களா? இதனால் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா!

தினமும் முட்டை சாப்பிடுறீங்களா? இதனால் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா!

 பாதிப்புகள் 

இந்த பாக்டீரியா உணவில் சேர்ந்தால் விஷமாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த பாக்டீரியாவில் பாதிக்கப்படும் நபர்கள் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வாந்தி ஏற்படும்.இது ஒரு தொற்று நோயாகக் கருதப்படுகிறது.

உடைந்த முட்டைகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பு

குறிப்பாகப் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சையாக்கப்படாவிட்டால், மரணம் கூட ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் முட்டையை முழுமையாகச் சமைத்துச் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சமைக்கும் போது முட்டைகள் வெடித்தால், அவை பாதுகாப்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.