சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த செடி போதும்..பெயர் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க- ஏன் தெரியுமா?
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும் இன்சுலின் செடி குறித்து இந்த பதிவில் விளக்கமாகப் பார்க்கலாம்.
சர்க்கரை நோய்
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் காணப்படுகிறது. இதற்குக் காரணம் ஆரோக்கியமான, சீரான உணவுப் பழக்கத்தை நாம் ஏதோ ஒரு வகையில் தவற விட்டுவிடுவதால் ஏற்படுகிறது.
மாவுச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளும் இந்திய மக்களுக்குச் சர்க்கரை நோய்க்கான அபாயம் அதிகமாக உள்ளது.மேலும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த இன்சுலின் செடி பெரிதும் உதவுகிறது.
இந்த தாவரம் பொதுவாகத் தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டதாகும்.இந்தியாவில் தென்மாநில பகுதிகளில் இது வளருகின்றது. பெரும்பாலும் தோட்டங்களில் அழகுச் செடியாக வளர்க்கப்படுகின்றது.
இன்சுலின் செடி
ரத்த சர்க்கரையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது ஒரு வரப் பிரசாதம் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இதனைத் தினசரி ஒரு இலையைப் பறித்து, மென்று சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை பெருமளவில் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்று தெரிவிக்கின்றனர்.
மேலும் நீரிழிவு நோயாளிகள் இந்த இலைகளை உலர்த்தி பொடியாகவும் பயன்படுத்தலாம்.இந்த செடி அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு, கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தல் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.