ஆடி கார், பிளாட் என சொகுசு வாழ்க்கை; விமானத்தில் பறந்து திருடிய பலே திருடன்!

Gujarat Crime
By Sumathi Jul 07, 2024 04:07 AM GMT
Report

நபர் ஒருவர் விமானத்தில் சென்று பல்வேறு மாநிலங்களில் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

சொகுசு வாழ்க்கை

குஜராத், வாபி நகரில் ரூ.1 லட்சம் திருட்டு தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த போலீஸார் மும்பையில் வசிக்கும் கனுபாய் சோலங்கி என்பவரை கைது செய்தனர்.

கனுபாய் சோலங்கி

தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், மஹாராஷ்டிரா மும்ப்ரா பகுதியில் ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டில் வசித்து வருகிறார் கனுபாய். அவரிடம் ஆடி கார் ஒன்றும் உள்ளது.

சொகுசு வாழ்க்கை... குறிவைத்து கொள்ளையடித்த இன்ஸ்டா ஜோடி - நையப்புடைத்த பொதுமக்கள்!

சொகுசு வாழ்க்கை... குறிவைத்து கொள்ளையடித்த இன்ஸ்டா ஜோடி - நையப்புடைத்த பொதுமக்கள்!

திருட்டு சம்பவம்

குஜராத் மட்டுமல்லாமல், தெலுங்கானா, ஆந்திரா, ம.பி., மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் திருட்டுகளில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது 19 திருட்டு வழக்குகள் உள்ளன. முஸ்லிம் மதத்தை சேர்ந்த பெண் ஒருவரை, தனது பெயரை மாற்றி சொல்லி திருமணம் செய்துள்ளார்.

ஆடி கார், பிளாட் என சொகுசு வாழ்க்கை; விமானத்தில் பறந்து திருடிய பலே திருடன்! | Thief Steal Own Car Fly In Plane Gujarat

வெளிமாநிலங்களுக்கு திருட்டில் ஈடுபட செல்லும் சோலங்கி, விமானத்தில் பயணித்துள்ளார். அந்த மாநிலங்களில் சொகுசு ஓட்டலில் தங்கி ஓட்டல் கார் மூலம் பயணம் செய்துள்ளார்.

திருட்டில் ஈடுபடுவதற்கு முன் பகல் நேரங்களில், சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று உளவு பார்த்து வந்துள்ளார். மும்பையில் இரவு நேர விடுதிகள், நடன விடுதிகளில் இரவு பொழுதை செலவிட்டுள்ளார். இதற்காக மாதம் ரூ.1.50 லட்சம் செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.