குடும்பமாக சேர்ந்து திருட்டு தொழில்.. கொள்ளை பணத்தில் டூர், சொகுசு வாழ்க்கை - கூண்டோடு தூக்கிய போலீஸ்!

Coimbatore Tamil Nadu Police
By Vinothini Aug 08, 2023 05:14 AM GMT
Report

குடும்பமாக சேர்ந்து கொள்ளையடித்த கும்பலை போலீசார் லாவகமாக பிடித்துள்ளனர்.

கொள்ளை

கோவையில் பல இடங்களில் கொள்ளை நகை பறிப்பு ஆகியவை சமீப காலமாக தொடர்ந்து நடந்து வந்தது. ந்த சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன் பேரில் உதவி கமிஷனர் ரவிகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

family-caught-who-looted-money-in-covai

அதனால் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர், அப்பொழுது நகை பறிப்பில் ஈடுபட்ட கும்பல் மருதமலை முருகன் கோவிலுக்கு வந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் அந்த தனிப்படை சாதாரன வேடத்தில் கோவிலுக்கு சென்றனர்.

அப்பொழுது அங்கு சந்தேகிக்கும் விதமாக சுற்றிய 3 பெண்கள் மற்றும் 1 ஆண் ஆகியோரை பிடித்தனர். அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ரவி (வயது 47), அவரது மனைவி பழனியம்மாள் (40), இவர்களின் உறவினர்கள் வனிதா (37), நதியா (37) என்று தெரியவந்து.

விசாரணை

இந்நிலையில், அவர்களிடம் விசாரணை நடத்தினர், அப்பொழுது இவர்கள் அனைவருக்கும் மூளையாக செயல்பட்டவர் ரவி என்று தெரிந்தது. இவர்கள் கோவையில் மட்டுமின்றி சேலத்திலும் பல பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர். இவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 50 பவுன் நகையை மீட்டனர்.

family-caught-who-looted-money-in-covai

மேலும், விசாரணை நடத்திய போலீசார் தெரிவிக்கையில், "இந்த கொள்ளை கும்பல் மாதத்தில் 30 நாட்களில் 20 நாட்கள் மட்டுமே நகை பறிப்பு அல்லது கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவார்கள். மற்ற 10 நாட்கள் தாங்கள் கொள்ளையடித்த பணத்தை கொண்டு பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இதுவரை அவர்கள் புதுடெல்லி, மும்பை, காஷ்மீர் என பல்வேறு இடங்களுக்கு சென்று வந்து உள்ளனர்.

மேலும், இந்த பணத்தில் பெங்களூரில் ரூ.5 கோடி மதிப்பில் பங்களா வாங்கியுள்ளனர், அவர்களது பிள்ளைகளை டாக்டர், என்ஜினீயரிங் படிக்க வைத்துள்ளனர். பின்னர், கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பாக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டே கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி வந்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.