இனி இவர்கள் ரீசார்ஜ் செய்ய முடியாது - வெளியான அதிரடி அறிவிப்பு
18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு செல்போன் ரீசார்ஜ் மற்றும் சர்வீஸ் செய்து கொடுக்க மாட்டோம் என செங்கல்பட்டு மாவட்ட செல்போன் சர்வீஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
ரீசார்ஜ் செய்ய முடியாது
நம் தலைமுறை இளைஞர்களிடம் உள்ள செல்போன் பயன்பாட்டால் , பல்வேறு குற்றங்களும் விழிப்புணர்வு இல்லாத மரணங்களும் சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
அதிலும் குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இடையே செல்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இதனால் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டு போன்றவற்றிக்கு அடிமையாகி காணப்படுகின்றனர் . இதனை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் 18 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு செல்போன் ரீசார்ஜ் மற்றும் சர்வீஸ் செய்து கொடுப்பதில்லை எனவும் பில் இல்லாமல் கொண்டுவரப்படும் செல்போன்களை வாங்கமாட்டோம் எனவும்,
மாவட்டம் முழுவதும் ஒரே பொருள்; ஒரே விலை திட்டத்தில் அனைத்து கடைகளில் ஒரே விலையில் விற்பனை செய்யப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட செல்போன் சர்வீஸ் அஸோஸியேஷன் தெரிவித்துள்ளது .
மக்களிடம் போதிய வரவேற்பை பெற்றுள்ள இந்த புதிய முறை கூடிய விரைவில் தமிழகம் முழுவதும் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.