Free Fire ஆன்லைன் விளையாட்டால் 21 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை - பரபரப்பு சம்பவம்
Free Fire ஆன்லைன் விளையாட்டால் 21 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Free Fire ஆன்லைன் விளையாட்டு
கரூர், சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் சத்தியபாமா. இவருடைய மகன் சஞ்சய் (21). சஞ்சய்க்கு Free fire விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். 12ம் வகுப்பு படிக்கும் போது விளையாடத் தொடங்கியவர் கல்லூரிக்கு சென்று வந்த பிறகும், அவர் இந்த ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளார்.சஞ்சயின் நண்பர்கள் போன் செய்வதாக கூறி, சஞ்சயிடமிருந்து செல்போனை வாங்கி Free Fireயின் User ID மற்றும் Password திருடி தன்னுடைய பெயருக்கு மாற்றிக்கொண்டு செல்போன் தொலைந்து விட்டதாக கூறி ஏமாற்றியிருக்கிறார்கள். 6 மாதத்திற்கு பிறகும், மீண்டும் நண்பர்கள் சஞ்சயிடம் இதேபோல் செல்போனை வாங்கி ஏமாற்றியுள்ளனர்.
இதனால், மிகுந்த மனஉளைச்சலில் சுற்றித் திரிந்த சஞ்சய், சக நண்பர்களிடம் இது குறித்து பேசி புலம்பியுள்ளான். கஷ்டப்பட்டு விளையாடி சேர்த்து வைத்த பணத்தை நண்பர்கள் திருடிவிட்டதால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளான் சஞ்சய்.
தூக்கிட்டு தற்கொலை
இந்நிலையில், சஞ்சய் அம்மா வேலைக்கு சென்ற நேரத்தில், அவரது புடவையை எடுத்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார் சஞ்சய். வேலைக்கு சென்று திரும்பிய தாய் மகன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சஞ்சய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இது குறித்து போலீசார் முதற்கட்ட விசாரணையில், ப்ரி பயர் கேமின் user id, password-ஐ சக நண்பர்கள் திருடிக் கொண்டதால் வாட்ஸ் அப்-பில் ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டிற்கு அடிமையாகி இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர் கதையாகிக்கொண்டு வருகிறது.