பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சியில் ரசிகர்கள்
அமெரிக்காவை சேர்ந்த 16 வயது இளம் நடிகையான கைலியா போசே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது தற்கொலை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில், பிரபலமான ''Toddlers and Tiaras'' என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர்தான் கைலியா போசே. இவர் கோடீஸ்வரரின் ஒரே மகள் ஆவார்.
இவருக்கு கோடிக்கணக்கான சொத்து உள்ளது. இந்நிலையில், கைலியா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோர்களை நிலை குலைய வைத்திருக்கிறது.
பெற்றோர்களை மட்டுமல்ல, ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இவரது இறப்பு குறித்து கைலியா குடும்பத்தார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் -
அந்த அறிக்கையில் -
எங்களது ஒரே மகள் கைலியா திறமையும், அழகும் நிறைந்த பெண். எங்களை விட்டு சென்றுவிட்டாள்.
எங்களால் எனது மகளின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்நேரத்தில் எங்களுக்கு தொல்லை கொடுக்காமல், எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மதித்து நிம்மதியாக இருக்க விடுங்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், கைலியா கார் விபத்தில் உயிரிழந்ததாக சொல்லப்படும் நிலையில், இது முற்றிலும் பொய் என்றும், ஒரு சில பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இது கொலையா..? விபத்தா..? இல்லை தற்கொலையா..? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan