டிசம்பர் 31-க்கு பிறகு Google Pay, Paytm, Phonepe பயன்படுத்த முடியாது?? - மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை ..!!

India
By Karthick Dec 17, 2023 03:54 AM GMT
Report

UPI செயலிகளில் ஏற்படும் மோசடியை தடுத்து பேமெண்ட்டுகளை பாதுகாப்பானதாக மாற்ற மத்திய அரசு புதிய முறையை அமல்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

UPI

Google Pay, Paytm, Phonepe UPI செயலிகள் வருகைக்கு பிறகு தற்போது பெரும்பாலானோர் கையில் பணமே இருப்பதில்லை. எங்கு - எதற்கு சென்றாலும் UPI பணப்பரிவர்த்தனை தான் செய்கிறார்கள்.

these-users-cant-use-upi-payments-after-dec-31st

மக்கள் நவீனமயமாவதை இது குறிக்கிறது என்றாலும், மற்றொரு இந்த பயன்பாடுகள் மூலம் பெரும் மோசடி சம்பவங்களும் நடைபெற்று வருகின்றது. அதன் நடவடிக்கைகளின் படி, புதிய கட்டுப்பாடுகளையும் வழிமுறைகளையும் மத்திய அரசு கொண்டுவரவுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு நொடிக்கு 2.5 ஆர்டர்..! ஸ்விக்கியில் பிரியாணிக்கு டஃப் கொடுத்த உணவு..!!

ஒரு நொடிக்கு 2.5 ஆர்டர்..! ஸ்விக்கியில் பிரியாணிக்கு டஃப் கொடுத்த உணவு..!!

புதிய வழிமுறைகள்

அதாவது நுகர்வோர் ஒருவரோ அல்லது தொழில் துறை சேர்ந்த ஒருவரோ குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக UPI மூலம் பணம் செலுத்தினால், அவருக்கு அழைப்பு அல்லது SMS மூலம் எச்சரிக்கை அனுப்பப்பட்டு பரிவர்த்தனையை சரிபார்க்கும்படி கேட்கப்படும்.

these-users-cant-use-upi-payments-after-dec-31st 

நுகர்வோர் ஒருவர் 5 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பணம் செலுத்த முற்பட்டால் இந்த மெசேஜ் எச்சரிக்கை வரும் என்றும் கூறப்படுகிறது. அதனை சரிபார்த்த பின்னரே, இந்த பெமண்ட நிறைவுபெறும்.

திடீரென சரசரவென குறையும் தக்காளி, வெங்காயம் விலை - எவ்வளவு தெரியுமா?

திடீரென சரசரவென குறையும் தக்காளி, வெங்காயம் விலை - எவ்வளவு தெரியுமா?

UPI-ஐ வேலை செய்யாது

அதே போல மற்றொரு வழிகாட்டுதலும் வரவுளள்து. அதன்படி, Paytm, Phone-Pay மற்றும் Google-Pay போன்ற பணம் செலுத்தும் வசதிகளை வழங்கும் வாடிக்கையாளர்களின் UPI கணக்கு நீண்ட கால தாமதமாக இருக்கும் வாடிக்கையாளர்களைச் சரிபார்க்கும்படி கேட்டுக் கொண்டது.

these-users-cant-use-upi-payments-after-dec-31st

இன்று வரை டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யப்படவில்லை என்றால் அக்கணக்கு செயலிழந்துள்ளது. அத்தகைய வாடிக்கையாளர்கள் மீண்டும் KYC செய்து. அதன் கீழ் வங்கி கணக்கு எண் மற்றும் மொபைல் எண் சரிபார்ப்பு போன்றவற்றை டிசம்பர் 31, 2023க்குள் முடிக்கவில்லை என்றால், புதிய ஆண்டோடு அத்தகைய வாடிக்கையாளர்கள் UPIஐப் பயன்படுத்த முடியாது.