ஒரு நொடிக்கு 2.5 ஆர்டர்..! ஸ்விக்கியில் பிரியாணிக்கு டஃப் கொடுத்த உணவு..!!
ஒவ்வொரு வருடமும் படங்களின் வெற்றி வரிசைப்படுத்துவது போல, சமீபகாலமாக ஸ்விக்கி உணவு டெலிவரி ஆப்பில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு குறித்தான தகவலும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
Swiggy
உலகம் நவீனமயமானதை அடுத்து உணவை ஆர்டர் செய்து எளிதாக வீட்டில் இருந்து சாப்பிட அறிமுகப்படுத்தப்பட்டவை தான் உணவு டெலிவரி ஆப்கள். அதில், இந்தியாவை பொறுத்தமட்டில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது ஸ்விக்கி மற்றும் ஜோமேட்டோ ஆப்களே.
மக்களின் பயன்பாடு அதிகரித்த நிலையில், அதனை தொடர்ந்து தான் வருடாந்திரமாக தங்கள் ஆப்பில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு எது என்பதை குறித்து டேட்டாவை ஆண்டு தவறாமல் ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டு வருகின்றது.
பிரியாணி
அப்படி இந்த வருடமும் தங்களின் ஆப்பில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக பிரியாணி முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனையை தொடர்ந்து தொடர்ந்து 8வது ஆண்டாக பிரியாணி படைத்துள்ளது.
சராசரியாக ஒரு நாளில் 4 பிரியாணி ஆர்டர் என 2023ம் ஆண்டில் இந்தியாவில் ஒரு நொடிக்கு 2.5 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தாண்டு மட்டும் 2.49 மில்லியன் புதிய பயனாளர்கள் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர் என அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஹைதரபாத்தில் மட்டும் இந்தாண்டு 1633 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
7.7 மில்லியன் ஆர்டர்
அதே போல, 42.3 லட்சத்திற்கு மும்பையைச் சேர்ந்த பயனாளர் ஒருவர் உணவுகளை ஆர்டர் செய்துள்ளதாக குறிப்பிட்ட நிறுவனம், சண்டிகரில் இந்தியா – பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டியின்போது ஒரு குடும்பத்தினர் மொத்தமாக 70 பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர்.
அதே போல, பிரியாணிக்கு டஃப் கொடுத்து, குலாப்ஜாமமுன்ஸ் வெறும் துர்கா பூஜை 7 நாட்களில் மட்டும் 7.7 மில்லியன் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது மிகவும் விரும்பப்பட்ட சைவ உணவாக மசாலா தோசை இருந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.