திடீரென சரசரவென குறையும் தக்காளி, வெங்காயம் விலை - எவ்வளவு தெரியுமா?
வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளி, வெங்காயம் விலை குறைந்துள்ளது.
வரத்து அதிகரிப்பு
அதிக மழையால் காய்கறிகளின் வரத்து குறைவால் விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது வரத்து அதிகரிப்பின் காரணமாக விலை கனிசமாக குறைந்துள்ளது.
அதன்படி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், பெரிய வெங்காயம் 1 கிலோ 36 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதேபோல், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலை குறைவு
மேலும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 08 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
காய்கறிகளின் விலைகள் கடந்த வாரத்தைக் காட்டிலும் கிலோவுக்கு ரூ.20 முதல் 30 வரை குறைந்துள்ளது.