நாவல் பழத்தினை இவர்களெல்லாம் சாப்பிடக்கூடாது - கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..
நாவல் பழங்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனை குறித்து பார்க்கலாம்.
நாவல் பழம்
ஜாவா பிளம் என்றும் அழைக்கப்படும் நாவல் பழங்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க கணிசமாக உதவுகின்றன.
வயிற்று வலி, சர்க்கரை நோய், மூட்டுவலி போன்ற பிரச்சனைகளுக்கு பயக்க கூடியது. இருப்பினும், சில உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் நாவல் பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும் அல்லது சாப்பிடாமல் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த பழங்களை அதிகம் சாப்பிடக்கூடாது. மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் இதை சாப்பிடாமல் தவிர்க்கலாம் அல்லது மிதமான அளவு எடுத்து கொள்ளலாம்.
முகப்பரு அல்லது ஸ்கின் ட்யூமர் போன்ற பிரச்சனைகள் இருந்தால், நாவல் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
வயிற்றுப்போக்கு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், இதனை சாப்பிட்டால் வாந்தி வரும் அபாயம் உள்ளது. நாவல் பழத்தை அதிகமாக சாப்பிடுவது பல் சொத்தையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.