அரிசியை ஊறவைத்து சமைப்பீங்களா? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..
சமைப்பதற்கு முன் அரிசியை தண்ணீரில் ஊறவைப்பது குறித்தான நன்மைகளை பார்க்கலாம்.
சாதம் சமைத்தல்
சமைப்பதற்கு முன் அரிசியை தண்ணீரில் ஊறவைப்பது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்த முறையில் சமைத்து சாப்பிடுவதன் மூலம் தூக்கம் நன்றாக வரும்.
செரிமானமும் சீராக அமையும். அரிசியை தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம், அதன் ஊட்டச்சத்துக்கள் நன்றாக உறிஞ்சப்படுகிறது. அரிசியில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் எளிய சர்க்கரைகளாக உடைக்கப்படுகிறது.
நீரிழிவு
இதன்மூலம், அதனை எடுத்து கொள்ளும் நபரின் ரத்த சர்க்கரையும் கட்டுப்பாட்டில் இருக்கும். அதே நேரம் அரிசியை சுமார் 3-4 மணி நேரம் அளவிற்கெல்லாம் ஊறவைத்தலை தவிர்ப்பது நல்லது.
ஏனெனில், அரிசியிலுள்ள வைட்டமின் மற்றும் மினரல்ஸ் தண்ணீரில் கரைந்து விடுகின்றன. சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கலாம். அதுவே, அரிசியின் சரியான பதத்தில் அமையச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சமைப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.