மளமளவென அடர்த்தியாவும், நீளமாவும் முடி வளரனுமா? இந்த விதைகள் யூஸ் பண்ணியிருக்கீங்களா!
முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் விதைகள் குறித்துப் பார்க்கலாம்.
தலைமுடி வளர்ச்சி
தலைமுடியை உள்ளே இருந்து ஊட்டமளிப்பதற்கும் ஆரோக்கியமான, அழகான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு விதைகள் எளிதான வழிமுறையாக உள்ளது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் பயோட்டின் ஆகியவற்றால் நிரம்பிய ஆளி விதைகள் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
பூசணி விதைகள் துத்தநாகம், இரும்பு மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றின் ஆதாரமாக விளங்குகிறது. இது முடி உதிர்வைத் தடுக்கவும், உச்சந்தலையை வளர்க்கவும் மற்றும் ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்திற்கு பங்களிக்கவும் உதவும்.
ஒமேகா-3, புரதம் மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்துள்ள சியா விதைகள் ஆரோக்கியமான முடி வளர்ச்சி, வலிமை மற்றும் முடி உடைவதைத் தடுக்கிறது.
சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ மற்றும் செலினியம் நிறைந்துள்ளன. வைட்டமின் ஈ உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. செலினியம் முடி உடைவதை தடுக்கிறது.