இவங்கலாம் இளநீரை தப்பி தவறிக்கூட குடிச்சிடாதீங்க.. ஏன் தெரியுமா?

Cocoa fruit India World
By Swetha Dec 30, 2024 12:30 PM GMT
Report

இளநீர் குடிப்பதை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இளநீர் 

இயற்கையின் ஆரோக்கியமான பானமாக இளைநீர் அனைவராலும் அதிகம் அருந்தப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே இது அனைவருக்கும் ஏற்றதா என்று விவரமாக பார்க்கலாம்.

இவங்கலாம் இளநீரை தப்பி தவறிக்கூட குடிச்சிடாதீங்க.. ஏன் தெரியுமா? | These People Avoid Drinking Coconut Water

பெரும்பாலானோர் இளநீரை ஒரு சூப்பர்ஃபுட் என்று கருதுகின்றனர். இதை குடித்தால் நல்லது என்று பலர் கூறினாலும், . சில நபர்களுக்கு இளநீர் குடிப்பது தீங்கு விளைவிக்கும் என்று கூறபப்டுகிறது.

சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா? இதோ முழு விவரம்..

சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா? இதோ முழு விவரம்..

ஏன் தெரியுமா?

  •  இளநீரில் இயற்கையாகவே சர்க்கரை அளவு அதிகம். எனினும் இந்த சர்க்கரை வழக்கமாக பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை போல தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், நீரிழிவு நோயாளிகள் இளநீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிகப்படியான சர்க்கரையை சேர்த்து கொள்வது நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். இது அவர்களின் நிலையை மேலும் மோசமாக்கும் என்று கூறப்படுகிறது.
  • இளநீரில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. எனவே சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால் அல்லது கிட்னி டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தால், அதிக பொட்டாசியம் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை அதிகப்படியான பொட்டாசியம் ரத்தத்தில் சேர்ந்தால் அது சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
  • இளநீரில் சோடியம் அளவு குறைவாக உள்ளது. இதை குடித்த பின், ரத்த அழுத்தத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அல்லது உயர் ரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுப்பவர்கள் இளநீர் பருகுவதை குறைத்து கொள்ள வேண்டும். அதிகமாக இளநீர் குடிப்பது சில நேரங்களில் ரத்த அழுத்தத்தில் தேவையற்ற மாற்றங்கள் ஏற்பட வழிவகுக்கும். 
  • சிலருக்கு தேங்காய் ஒவ்வாமையாக இருக்கலாம். அவர்கள் இளநீர் குடித்தாலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த அலர்ஜி அறிகுறிகளில் சரும வெடிப்பு, அரிப்பு அல்லது சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்டவை அடங்கும். எனவே இளநீர் அல்லது தேங்காய் சாப்பிடுவது இது போன்ற அலர்ஜி ஏற்படுத்தினால் அவற்றை தவிர்த்து விடுங்கள்.
  • குழந்தைகளுக்கு இளநீர் குறைவாக கொடுப்பது நல்லது. ஏனென்றால் குழந்தைகள் அதிமாக இளநீர் பருகினார்கள் என்றால் அவர்களுக்கு வாயு, வயிற்றுப்போக்கு அல்லது அஜீரணம் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
  • உடல் எடையை குறைக்க முயற்சிப்போர் பலரும் இளநீரில் குறைந்த கலோரி இருப்பதால் டயட்டில் சேர்த்து கொள்வார்கள். ஆனால் அதில் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்க செய்யும் இயற்கை சர்க்கரை இருக்கிறது என்பதால் கவனமாக பருக வேண்டும். உடல் எடையை குறைக்கும்போது இளநீர் குடிக்க விரும்பினால் மிக குறைவாக அல்லது மிதமாக குடித்து கொள்ளலாம்.