சிலோன் - ஸ்ரீலங்கா - பெயரை மாற்றிக்கொண்ட நாடுகள் பற்றி தெரியுமா..?
தங்களது பெயரை மாற்றிக்கொண்ட நாடுகள் பற்றிய தகவல்.
பெயர் மாற்றம்
ஆசியாவிலேயே 6-வது பெரிய நாடான ஈராக்கின் பழைய பெயர் பெர்சியா. இந்த பெயர் 1935-ம் ஆண்டு ஈரான் என மாற்றப்பட்டது. தென் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் இருந்த ஸ்வாசிலாந்து என்ற நாட்டை சுதந்திரம் அடைந்து 50-வது வருடம் ஆனதையொட்டி, 2018-ம் ஆண்டு ஈஸ்வதனி என்று மாற்றியுள்ளனர்.
நமது அண்டை நாடான ஸ்ரீலங்கா அல்லது இலங்கையை இதற்கு முன்பு சிலோன் என அழைத்து வந்துள்ளார்கள். இந்த பெயரை 1972-ம் ஆண்டு மாற்றியுள்ளனர். வரலாற்றில் போஹேமியா என்று குறிப்பிடப்பட்டுள்ள செக் குடியரசு நாட்டை செக்கியா என்று பெயர் மாற்றியுள்ளார்கள்.
பர்மா - மியான்மர்
பல தீவுகள் இணைந்து ஐரிஷ் என்ற இருந்த நாட்டை அயர்லாந்து குடியரசு என மாற்றியுள்ளார்கள். நம்மில் பலர் பர்மா நாட்டு உணவுகளை விரும்பி சாப்பிடுவோம். இந்த பெயர் மியான்மர் என்று அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது.
சினிமா பிரபலங்கள் பலரும் சுற்றிப்பார்க்க செல்லும் துருக்கி நாட்டை இதற்கு முன்பு துர்க்கியே என்று அழைத்துள்ளார்கள். நம்மில் பலரும் வாழ்வில் ஒருமுறையாவது தாய்லாந்து நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருப்போம். இந்த நாட்டின் பழைய பெயர் சியாம் ஆகும். டச்சுக்கார்கள் வாழும் ஹொலண்ட் என்ற நாடு தற்போது நெதர்லாந்து என்று அழைக்கப்பட்டு வருகிறது.