உலகின் மிக உயரமான பாலத்தில் ஓடிய ரயில்; இந்திய ரயில்வே சாதனை - வைரல் Video!
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது.
செனாப் பாலம்
ஜம்மு காஷ்மீரில் கத்ரா-பனிஹால் பிரிவில் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தில் 'செனாப் பாலம்' கட்டப்பட்டு வருகிறது. செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள இந்த ரயில்வே பாலத்தின் உயரம் 359 மீட்டர் ஆகும்.
இந்த உயரம் பாரிஸில் உள்ள ஈஃபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிகம். உலகின் மிக உயரமான இந்த ரயில்வே பாலம் வழியாக ரம்பானில் இருந்து ரியாசிக்கு ரயில்வே சேவை விரைவில் தொடங்கவுள்ளது.
சோதனை ஓட்டம்
மேலும், இந்த ரயில் இணைப்பு திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சஞ்கல்தான் முதல் ரியாசி வரை செனாப் பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இது தொடர்பான வீடியோவை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்தவர்கள் இந்திய ரயில்வேயின் சாதனையை பாராட்டி வருகின்றனர்.
1st trial train between Sangaldan to Reasi. pic.twitter.com/nPozXzz8HM
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 16, 2024