காதலிக்க மறுப்பு..கல்லுாரி மாணவியை கல்லால் அடித்துக்கொன்ற வாலிபர்..!
கல்லுாரி மாணவி காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் மாணவியை கல்லால் அடித்துக் கொன்றுவிட்டு தப்பியோட்டம்.
ஒருதலை காதல்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுதிறனாளியான விவசாயி முருகேசன்.
இவருக்கு நந்தினி மற்றும் ரோஜா என்கிற இரு மகள்கள் உள்ளன.விஜய் என்ற ஒரு மகனும் உள்ளன. இவருடைய இரண்டாவது மகள் ரோஜா ஆத்துாரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.ஏ.தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் ஆத்துார் தாண்டவராயபுரம் பகுதியைச் சேர்ந்த நீலக்கிருஷ்ணன் மகன் சாமிதுரை இவர் ரோஜாவை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
மாணவி செல்லும் பேருந்தில் செல்லும் சாமிதுரை அடிக்கடி மாணவி ரோஜவை காதலிக்க கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியவரவே ஊரின் முக்கியஸ்தர்களை வைத்து சாமிதுரையை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
கொடூர கொலை
இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை மாணவி ரோஜா வீட்டில் ஆட்கள் இல்லாத போது சென்று வீட்டின் பின்புற பக்கம் பதுங்கியுள்ளான்.
அப்போது வீட்டில் இருந்து ரோஜா வெளியே வந்த போது சாமிதுரை மாணவி ரோஜாவை தன்னை காதலித்து திருமணம் செய்து கொண் இல்லை என்றால் உன்னை கொன்றுவிடுவேன் என கூறியுள்ளான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி ரோஜா கூச்சலிட்டுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த சாமிதுரை தான் மறைத்து எடுத்து வந்த மண்ணெண்ணையை ரோஜா மீது ஊற்றியுள்ளான்.
பின்னர் ரோஜாவை கீழே தள்ளி கழுத்தில் கால் வைத்து மிதித்து கொண்டு கல்லை துாக்கி தலையில் போட்டு கொடூரமாக தாக்கியுள்ளான்.
இதையறிந்த வந்த குடும்பத்தினரையும் தாக்கி தள்ளிவிட்டு அங்கியிருந்து தப்பி ஓடினான். மாணவி ரோஜாவை மீட்டு சிகிச்சைகக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவி்ட்டார் என கூறினர்.
இச்சம்பவம் பற்றி தகவறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் தப்பியோடிய சாமிதுரையை தேடி வருகின்றனர்.