ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியை பிளேடால்.. முதியவர் செய்த கொடூர செயல்!
ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியை பிளேடால் கிழித்துவிட்டு கணவன் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை
சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் ஜாபர் அலி. இவருக்கு வயது (67). இவரது மனைவி பாத்திமா பீவி (60). இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ள நிலையில் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் இளைய மகள் உயிரிழந்துவிட்டதால் தனது பேத்திக்கு துணையாக வியாசர்பாடியில் உள்ள மூர்த்திங்கர் நகர் ஹவுஸிங் போர்டு பகுதியில் ஜாபர் அலியும் அவரது மனைவியும் இருந்துள்ளனர்.
இந்த சூழலில் நேற்று காலை ஜாபர் அலி தனது மனைவியை ஆசைக்கு இணங்கும்படி கேட்டதாகத் தெரிகிறது. அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதிர்ச்சி சம்பவம்
வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றவே ஆத்திரம் அடைந்த ஜாபர் அலி, தான் வைத்திருந்த பிளேடால் மனைவியின் முகம், கையில் சரமாரியாகக் கிழித்துவிட்டுத் தப்பி சென்றுள்ளார்.இதனால் வலி தாங்கமுடியாமல் பாத்திமா பீவி கத்தவே ரத்தவெள்ளத்தில் துடித்த அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அவருக்கு முகம் மற்றும் கையில் 14 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த எம்கேபி.நகர் காவல்துறை தப்பி சென்ற ஜாபர் அலியைத் தேடி வருகின்றனர்.